தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஜூன் 06, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 414 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 128.09 - 135.10 ரூபாய், இரண்டாம் தரம், 85.90 - 125.10 ரூபாய் என, 3,800 கிலோ கொப்பரை தேங்காய், 24.46 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 30 ஆயிரம் கிலோ எடையில், 79 ஆயிரத்து, 315 தேங்காய் கொண்டு வந்தனர். கருப்பு தேங்காய் கிலோ, 35.89 ரூபாய் முதல் 42.65 ரூபாய், வெள்ளை தேங்காய் கிலோ, 27.55 ரூபாய் முதல் 35.30 ரூபாய், தண்ணீர் வற்றிய தேங்காய் கிலோ, 43.65 ரூபாய்க்கும் விற்றது. இதேபோல் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் ஒரு கிலோ, 30 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்றது. தேங்காய் பருப்பு ஒரே விலையாக கிலோ, 124 ரூபாய்க்கு விற்பனையானது.

* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது. மொத்தம், 9,710 கிலோ சூரியகாந்தி விதையை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ விதை, 70.50 ரூபாய் முதல் 80.19 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 7.57 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us