தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஜூன் 08, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடந்தது. வெள்ளை எள் கிலோ, 128.19 - 138.69 ரூபாய், கருப்பு எள் கிலோ, 128.89 - 146.39 ரூபாய், சிகப்பு எள் கிலோ, 106.99 - 137 ரூபாய் என, 287 மூட்டை வரத்தாகி, 27.38 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடந்தது. மொத்தம், 2,020 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார் 140-920 ரூபாய், தேன்வாழை தார் 90-650க்கும், பூவன்தார் 180-550க்கும், ரஸ்தாளி தார் 210-680க்கும், மொந்தன் தார் 70-320க்கும், ஜி-9 தார் 180-460க்கும், பச்சை நாடன் தார் 140-350க்கும் ஏலம் போனது. கதளி கிலோ 28-50க்கும், நேந்திரன் கிலோ 12-35க்கும் என, 4.33 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கால்நடை சந்தை கூடியது. இதில் ஜெர்சி இன மாடுகள், 2,000 முதல் 43 ஆயிரம் ரூபாய், மலை மாடுகள், 3,000 ரூபாய் முதல் 50 ஆயிரம், நாட்டு மாடுகள், 4,000 ரூபாய் முதல் 54 ஆயிரம், எருமைகள், 3,000 முதல் 55 ஆயிரம் ரூபாய் என, 3,500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு, 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ கனகாம்பரம், 700 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை பூ, 520, முல்லை, 240, காக்கடா, 250, செண்டுமல்லி, 60, கோழிக்கொண்டை, 80, ஜாதி முல்லை, 600, சம்பங்கி, 15, அரளி, 50, துளசி, 50, செவ்வந்தி, 280 ரூபாய்க்கும் விற்பனையானது.

* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 3 டன் முருங்கை நேற்று வரத்தானது. கரும்பு முருங்கை கிலோ, 27 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் பரவலாக பெய்த மழையால் வரத்து குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us