ADDED : ஜூன் 13, 2026 03:56 AM
* ஈரோடு மாவட்டம்
பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை
சங்கத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 29 ஆயிரம் கிலோ
எடையில், 80 ஆயிரத்து, 675 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
கருப்பு தேங்காய் கிலோ, 35.70 ரூபாய் முதல் 37.39 ரூபாய், வெள்ளை
தேங்காய், 32.61 ரூபாய் முதல் 36 ரூபாய் வரை விற்பனையானது.
இதேபோல்
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு,
3,300 காய் வந்தது. ஒரு கிலோ, 28.30 ரூபாய் முதல் 33.39 ரூபாய் வரை
விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில்
ஒரு கிலோ மல்லிகை பூ, 880 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ, 280,
காக்கடா, 300, செண்டுமல்லி, 130, கோழிக்கொண்டை, 80, ஜாதிமுல்லை, 500,
கனகாம்பரம், 700, சம்பங்கி, 60, அரளி, 130, துளசி, 50, செவ்வந்தி, 280
ரூபாய்க்கும் விற்பனையானது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை
விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், குறைந்த விலை
(கிலோ), 31 ரூபாய், அதிகபட்சம், 32 ரூபாய்க்கும் விற்பனையானது.
அதேபோல், தேங்காய் பருப்பு ஏலத்தில் குறைந்த விலை (கிலோ), 80 ரூபாய்,
அதிகபட்சம், 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
* அவல்பூந்துறை
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 511 மூட்டை
கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 119.09 - 123 ரூபாய்,
இரண்டாம் தரம், 80.89 - 120.10 ரூபாய் என, 24,042 கிலோ கொப்பரை
தேங்காய், 28 லட்சத்து, 88,851 ரூபாய்க்கு விற்பனையானது.
