தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : மார் 11, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 31,980 தேங்காய் விற்ப-னைக்கு வரத்தானது. ஒரு கிலோ, 35.89 - 47.89 ரூபாய் என, 9,278 கிலோ தேங்காய், 4.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனையா-னது. கொப்பரை தேங்காய், 460 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 145.43 - 153.29 ரூபாய், இரண்டாம் தரம், 118.99 - 151.69 ரூபாய்க்கு விலை போனது. மொத்தம், 21,694 கிலோ கொப்பரை தேங்காய், 31 லட்சத்து, 99,826 ரூபாய்க்கு விற்பனை-யானது. எள், 49 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ கருப்பு எள், 12௨ - 15௨ ரூபாய் என, 3,579 கிலோ எள், 4.64 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்-துக்கு, 5,841 தேங்காய் வரத்தாகி, காய் ஒன்று 38-45 ரூபாய்; 40 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 130-154 ரூபாய்; நான்கு மூட்டை ஆமணக்கு வரத்தாகி கிலோ, 72-86 ரூபாய்க்கு விற்றது.

* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,200 மூட்டை பி.டி., ரக பருத்தி கொண்டு வரப்பட்-டது. ஒரு கிலோ, 76 ரூபாய் முதல், 83 ரூபாய் வரை, 400 குவிண்டால் பருத்தி, 30 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ ஜாதி முல்லை, 1,100 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்-லிகை, 750; முல்லை, 1,020; காக்கடா, 400; செண்டு மல்லி, 30; கோழிக்கொண்டை, 100; கனகாம்பரம், 600; சம்பங்கி, 80; அரளி, 80; துளசி, 50ரூபாய்க்கு விற்றது.

* ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது. தமி-ழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்-டிரா மாநிலங்களில் இருந்து மக்கள், வியாபாரிகள், கடைக்கா-ரர்கள் வந்தனர். ரம்ஜானுக்கான ஆடைகளை அதிகமாக வாங்கி-யதால், மொத்த விற்பனை அதிகரித்தது. சில்லறை விற்பனையில் கோடை கால ரக துணிகளின் விற்பனை அதிகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us