/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்
/
மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்
ADDED : ஜன 01, 2025 01:17 AM
ஈரோடு, ஜன. 1-
ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 26வது வார்டு விநாயகர் கோவில் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பகுதி சபை கூட்டம் நேற்று நடந்தது. கவுன்சிலர் சரண்யா தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் மனிஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை சேர்க்க வேண்டும். தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பெரும்பாலானோர் மனு கொடுத்தனர்.
இதேபோல், 33வது வார்டு முனியப்பன் சுவாமி கோவில் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில், பகுதி சபை கூட்டம் நடந்தது. கவுன்சிலர் ஜெயமணி தலைமை வகித்தார். இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

