ADDED : மே 22, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும், 24 மதியம் 1:00 மணிக்கு நாட்டு சர்க்கரை ஏலம் நடக்கிறது. அப்போது, பழனி கோவில் தேவஸ்தான
நிர்வாகம், நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளனர். எனவே நாட்டு சர்க்கரை உற்பத்தியாளர்கள், கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி என கலப்படம் இல்லாத சுத்தமான மற்றும் தரமான நாட்டு சர்க்கரையை கொண்டு வர, அதன் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.