தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு


ADDED : அக் 16, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில்

பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

ஈரோடு, அக். 16-

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 55க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றால் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். பயணிகள் வசதிக்காக சேலம் கோட்டம் சார்பில் டிக்கெட் வழங்கும் பகுதி அருகே, பூட்டும் வசதியுடன் கூடிய பொருள் பாதுகாப்பு அறை உள்ளது. டெண்டர் அடிப்படையில் தனியாருக்கு இந்த அறை விடப்படுகிறது. பொருட்களுக்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகமே நிர்ணயித்து அறிவிப்பையும் வெளியிடுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெண்டர் எடுத்த தனியாரின் அவகாசம் நிறைவு பெற்று விட்டது. இதனால் அறையை பூட்டி சாவியை ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்து சென்று விட்டார். அறையை உடனடியாக திறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: டெண்டர் காலம் முடிந்ததால் ஒரு மாதமாக பாதுகாப்பு அறை பூட்டி கிடக்கிறது. அறை நடத்துவதற்கான டெண்டரை விரைந்து முடித்து, பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us