/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
18ம் படி அலங்காரத்தில் காட்சி தந்த ஐயப்பன்
/
18ம் படி அலங்காரத்தில் காட்சி தந்த ஐயப்பன்
ADDED : ஜன 02, 2025 01:38 AM
புன்செய்புளியம்பட்டி, ஜன. 2-
புன்செய் புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக்குழு ஐயப்ப பக்தர்கள், நடப்பாண்டு இருமுடி கட்டும் நிகழ்ச்சி மற்றும் 30ம் ஆண்டு விழா, காமாட்சியம்மன் கோவிலில் நேற்று யாக சாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பசுமாடு, கன்றுக்கு கோமாதா பூஜை நடந்தது. பின், தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் சிலைக்கு முன்பாக, 18ம் படி அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
உற்சவர் உள்ள பதினெட்டு படிகளிலும், மலர்களால் பூஜை செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டன. கோவில் வளாத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி, இசை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. விழா நிறைவாக, 136 ஐயப்ப பக்தர்கள், குருசாமி தலைமையில் இருமுடி கட்டி, சபரிமலைக்கு மூன்று வாகனங்களில் புறப்பட்டனர்.

