/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதியின்றி கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
/
அனுமதியின்றி கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ADDED : ஜூன் 27, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் பகுதியில் சட்ட விரோதமாக கற்கள், மண், மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.
காங்கேயம் முத்தூர் ரோடு பிரிவு அருகே அனுமதி இன்றி, 9 யூனிட் ஜல்லிக்கற்கள் கொண்டு சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். வாகனத்தை பறிமுதல் செய்து காங்கேயம் போலீசில் ஒப்படைத்தனர். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.