தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வெற்றிகரமாக பணிகளை முடித்து குடோனுக்கு திரும்பிய இயந்திரங்கள்

வெற்றிகரமாக பணிகளை முடித்து குடோனுக்கு திரும்பிய இயந்திரங்கள்

வெற்றிகரமாக பணிகளை முடித்து குடோனுக்கு திரும்பிய இயந்திரங்கள்


ADDED : மே 06, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் ஆறு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியிலும், இரு தொகுதிக்கு கோபி கலை அறிவியல் கல்லுாரியிலும் நடந்தது.

மாவட்டத்தில்ஓட்டுப்பதிவுக்காக, 3,532 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 விவிபேட் பயன் படுத்தப்பட்டன.

ஓட்டுப்பதிவில் எந்த தொகுதியிலும் இயந்திர பழுது, எண்ணிக்கை நிறுத்திவைப்பு போன்ற பிரச்னை எழவில்லை.

அதேசமயம் வெற்றி, தோல்வி அடைந்த வேட்பாளர்களுக்கு இடையேயான வித்தியாசமும் அதிகமாக இருந்ததால், ஓட்டு எண்ணும் பணியை மாவட்ட தேர்தல் பிரிவு நிறைவு செய்தது.

இதை தொடர்ந்து சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இருந்து அனைத்து இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன், ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்குக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டன.

அங்கு ஏற்கனவே உள்ள போலீஸ் பாதுகாப்புடன், கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us