/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
/
சிவன்மலை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
ADDED : டிச 14, 2024 01:42 AM
காங்கேயம், டிச. 14-
கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி, காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, கால சாந்தி பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படட்டது. மாலை, 4:௦௦ மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து மாலை, 6:௦௦ மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்து, 6:30 மணிக்கு கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றப்பட்டதை தரிசனம் செய்தனர்.
* தாராபுரம் புதுக் காவல் நிலைய வீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில், நேற்று மாலை சொக்கப்பனை கொளுத்தி, கோவில் வளாக கொடிமரத்தில் கார்த்திகை ஜோதி ஏற்றப்பட்டது. இதேபோல் சோளக்கடைவீதி பாலதண்டாயுதபாணி கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் தீப திருவிழா நிகழ்வுகள் களை கட்டின.