நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை,:சென்னிமலை
சுப்பிரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர்களின் குல தெய்வமான,
முகாசிபிடாரியூர் அத்தனூர் அம்மன் கோவிலில், கும்பாபிஷேக நான்காம்
ஆண்டு நிறைவு விழா மற்றும் மஹா சுமங்கலி பூஜை நேற்று நடந்தது.
கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம், 57ம் குரு மஹா சன்னிதானம் ராஜசரவண
மாணிக்கவாசக சுவாமி அருளாசி உரையுடன் நடந்தது. இதில், 121 பெண்கள்
கலந்து கொண்டு சுமங்கலி பூஜையை நிறைவு செய்து ஆசி வழங்கினர். விழா
ஏற்பாடுகளை தலைவர் தபராஜ் குருக்கள், செயலாளர் சிவராஜ் குருக்கள்,
பொருளாளர் சுரேஷ் குருக்கள் செய்ததிருந்தனர்.

