தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொடிவேரியில் பராமரிப்பு பணி தீவிரம்

கொடிவேரியில் பராமரிப்பு பணி தீவிரம்

கொடிவேரியில் பராமரிப்பு பணி தீவிரம்


ADDED : நவ 03, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே கொடிவேரி தடுப்பணை பகுதியில், கடந்த அக்., 18ல் பெய்த பலத்த மழையால், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க, பரிசல் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் பிறகும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 15வது நாளாக நேற்றும் தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று தடுப்பணை வழியாக பவானி ஆற்றில்,கன அடி நீரே சென்றது.

இந்நிலையில் பலத்த மழையால், தடுப்பணை வளாகத்தின் சிறுவர் பூங்காவில் இருந்த ஓரிரு மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தது.

இதனால் பூங்கா தடுப்பு கம்பி சேதமடைந்தது. அதேசமயம் வெள்ளப்பெருக்கில் பவானி ஆற்றில் அடித்து வரப்பட்ட மரங்கள், தடுப்பணையில் சிக்கி சீரான நீரோட்டத்துக்கு தடையாக இருந்தது. இதனால் பாசன உதவியாளர்கள் அடங்கிய குழுவினர், சேதமான சிறுவர் பூங்கா ஓரத்தில் பாதுகாப்பு வேலி, தடுப்பணையில் சிக்கியிருந்த மரங்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us