தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'மக்கர்' சர்வரால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் தடங்கல்

'மக்கர்' சர்வரால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் தடங்கல்

'மக்கர்' சர்வரால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் தடங்கல்


ADDED : மார் 04, 2026 09:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 09:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல், ஈரோட்டில் பயனீட்டாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு ஈ.வி.என்., சாலையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு செயற்பொறியாளர் அலுவலக பின்புறம், ஈ.வி.என்., சாலை ஓரத்திலும் மின் கட்டணம் செலுத்தும் மையம் உள்ளது. முன்பு இவ்விரு இடங்களிலும் சேர்த்து ஐந்து கவுன்டர் செயல்பட்டன. ஆன்லைனில் செலுத்துவதை ஊக்கப்படுத்தவும், ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது, 2 மட்டுமே செயல்படுகிறது. இரு நாட்களாக சர்வர் பிரச்னையால் செயற்பொறியாளர் அலுவலக பின்புற கவுன்டர் மூடப்பட்டது.

இதனால் அங்கு ஒயர்மேனை நிறுத்தி வைத்து, கட்டணம் செலுத்த வருவோரை, பக்கத்து வளாகத்தில் உள்ள மையத்துக்கு அனுப்பினர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாலும், சர்வர் பிரச்னையால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி பணியாளர்கள் கூறியதாவது: வீடுகளில் மின் கட்டணம் எடுப்பதை, அட்டையில் கூட குறிப்பதில்லை. எனவே அவர்களுக்கான தொகை, எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தி உள்ளோம் என தெரியாமல் வருகின்றனர். சர்வர் இணைப்பு இருந்தால் மட்டுமே, தொகையை பெற்று ரசீது வழங்க இயலும். சமீபமாக சர்வர் பிரச்னை உள்ளது. அதை சீரமைக்காததால் மின் கட்டணம் பெறுவதில் சிக்கலாகிறது. ஆட்கள் பற்றாக்குறை, ரீடிங் எடுக்க செல்லுதல் போன்ற காரணத்தாலும், கவுன்டர்களை மூடும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us