ADDED : ஜூன் 09, 2026 01:47 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை; சென்னிமலை --
காங்கேயம் ரோட்டில் கணுவாய் இறக்கம் அருகேயுள்ள வனப்-பகுதியில், அடையாளம்
தெரியாத, 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் துாக்கிட்ட நிலையில்
எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.
இரு மாதங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என
கருதப்படுகிறது. சம்பவ இடத்தில் ஆரஞ்சு நிற அரைக்கை சட்டை கிடந்தது.
இறந்தவர் நீலம் மற்றும் வெள்ளை நிற கோடு போட்ட லுங்கி அணிந்திருந்தார்.
சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
