தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாட்ச்மேனை தாக்கி பணம் பறித்தவர் கைது

வாட்ச்மேனை தாக்கி பணம் பறித்தவர் கைது

வாட்ச்மேனை தாக்கி பணம் பறித்தவர் கைது


ADDED : ஆக 05, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:----சென்னிமலை, மேலப்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயன்,46; காமாட்சி அம்மன் மண்டப வாட்ச்மேன். நேற்று மாத சம்பளம், 7,000 ரூபாயுடன் வண்டிப்பேட்டை அருகே நடந்து சென்றார்.

அவ்வழியாக வந்த விஜயன் உறவினரான புதுக்கோட்டை மாவட்டம் புலிவலம், இலங்கை தமிழர் முகாமினை சேர்ந்த, தற்போது மேலப்பாளையத்தில் வசிக்கும் இந்துகுமார், 35, விஜயனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, பிராந்தி குடிக்க பணம் கேட்டார். விஜயன் தர மறுத்ததால், அவரை கைகளால் சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த பணத்தை பறித்து தப்ப முயன்றார்.

விஜயன் சத்தமிடவே அப்பகுதியினர் வந்தனர். இதைப்பார்த்த இந்துகுமார் தப்பி விட்டார். விஜயன் புகாரின்படி சென்னிமலை போலீசார் இந்துகுமாரை கைது செய்து, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us