/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனத்தில் மின்சாரம் பாய்ச்சி மானை கொன்றவர் கைது
/
வனத்தில் மின்சாரம் பாய்ச்சி மானை கொன்றவர் கைது
ADDED : அக் 19, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம், மாக்கம்பாளையம் அருகே வன அலுவலர்கள் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். பழையூர் கிராமத்தை ஒட்டிய கோழிப்பள்ளம் பகுதியில் மின் கம்பத்திலிருந்து கொக்கி மூலம், நேரடி உயரழுத்த மின்சாரம் பாய்ச்சி ஒரு பெண் புள்ளிமான் இறந்து கிடந்தது.
அவ்விடத்தில் மறைந்திருந்து பார்க்கையில் இறந்து கிடந்த மானை எடுத்து செல்ல ஒருவர் வந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், கோம்பைதொட்டி கிராமம் வெள்ளையன், 38, என்பது தெரிய வந்தது. மின்சாரம் பாய்ச்சி மானை கொன்றதை ஒப்புக்கொண்டார். கடம்பூர் வனத்துறையினர் கைது செய்து ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.