ADDED : ஏப் 17, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு சின்ன சேமூர் பள்ளிகூட வீதியை சேர்ந்தவர் ஆகாஷ், 20; தனியார் கல்லுாரி மாணவர். ஈரோட்டில் மற்றொரு கல்லுாரியில் படிக்கும், 17 வயது மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். தற்போது மாணவி ஒன்பது மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் நல குழுவினர் அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், ஆகாஷ் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
