ADDED : பிப் 16, 2026 04:27 AM
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், 25 வயது மதிக்கத்-தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடந்த, 12ல் கண்டுபி-டிக்கப்பட்டது. கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்து வந்-தனர். இறந்த வாலிபர் தலையில் ரத்தக்காயம் இருந்தது. இதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.
ஆற்றில் சடலமாக கிடந்தது, நாமக்கல் மாவட்டம் பள்ளிபா-ளையம் காவிரி ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்த சேகர் மகன் மகேந்-திரன், 23, ஜியோ மார்ட் ஊழியர் என தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டதையும் போலீசார் உறுதி செய்தனர்.இதற்கிடையில் கொலை தொடர்பாக, பள்ளிபாளையத்தை அடுத்த ஆலாம்பாளையம் குமரப்பா நகரை சேர்ந்த தனியார் நிறு-வன தொழிலாளி மதன்ராஜ், 21, தனது வக்கீலுடன், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று வந்தார். டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன், மதன்ராஜை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றார்.
கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் ஷியாம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
