ADDED : மே 30, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலையில், விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார். சென்னிமலை, வண்டிப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அப்பகுதியில், சோதனை மேற்கொண்டபோது சென்னிமலை டவுன், கொத்தங்காடு 2வது வீதியில் உள்ள குடியிருப்பில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி ராஜேஷ் டெப்நாத், 44, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
