ADDED : மே 13, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு ;ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர்.
அந்த ரயிலில் கிடந்த பையை எடுத்து பரிசோதித்தனர். அதில், கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.
கஞ்சாவை கடத்தி வந்த, கேரளா மாநிலம் எர்ணாகுளம் பிரகாஷ் மகன் ரஞ்சித், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடத்தி வந்த, 5.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
