ADDED : நவ 29, 2025 01:34 AM
டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம்- வலையம்பாளையம் சாலையில், பங்களாப்புதுார் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணலுடன் வந்த ஒரு டிராக்டரில் சோதனை செய்தனர். பெருமுகை குளத்துக்காடு வடக்கு தோட்டம் ஈஸ்வரன், 30, என தெரிந்தது. கரும்பாறை பகுதியில் நீர்வழித்தடத்தில் மணலை திருடி கொண்டு செல்வது தெரிய வந்தது. மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, ஈஸ்வரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
*டி.என்.பாளையம் அருகே உப்புபள்ளம் பகுதியில் பங்களப்புதுார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதி நாயுடு வீதியை சேர்ந்த ராஜா, 42, டாஸ்மாக் மது பாட்டிலை பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது. அவரை கைது செய்து, 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

