ADDED : மே 12, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
ஈரோடுஈரோடு ரங்கம்பாளையம் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பார்த்திபன், 62; ஈரோட்டில் நேதாஜி ரோட்டில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.
அப்போது டூவீலரில் வந்த ஈரோடு வளையக்கார வீதி எல்லை மாரியம்மன் கோவில் சந்தோஷ், 23, அவரது மொபைல்போனை பறித்து சென்றார். பார்த்திபன் புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார், சந்தோஷை கைது செய்தனர்.
