ADDED : பிப் 19, 2026 04:13 AM
ஈரோடு: ஈரோட்டில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 10 பேரிடம் ரூ.11.50 லட்சம் மோசடி செய்து, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டை சேர்ந்தவர் கங்கா, 34. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ், 59, என்பவர், எனக்கு அதிகாரிகளை நன்கு தெரியும். அரசு வேலை வாங்கி தருவதாக கங்காவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். தற்போது சத்துணவு பணியாளர் பணிக்கு, பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதை உண்மையென நம்பிய கங்கா, செல்வராஜிடம் ரூ.1 லட்-சத்து, 39 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.குமாஸ்தா பணி, அரசு மருத்துவ
மனையில் அலுவலக பணி மற்றும் பிற துறைகளில் அரசு பணி வாங்கி தருவதாக கூறி, 10 பேரிடம் ரூ.11 லட்சத்து, 50 ஆயிரம் பெற்றுள்ளார். பணத்தை பெற்ற செல்வராஜ், அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, ஈரோடு மாவட்ட குற்றப்பி-ரிவு போலீசில் கடந்த, 2014ல் புகார் அளித்தனர். போலீசார் மோசடி வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளியே வந்த செல்வராஜ், 8 மாதங்களாக நீதிமன்-றத்தில் இறுதி கட்ட விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறை-வானார். ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2ன் மாஜிஸ்திரேட் ராஜ்குமார், கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்-பித்தார். ஈரோடு மாவட்ட
குற்றப்பிரிவு போலீசார், திருப்பூரில் பதுங்கியிருந்த செல்வராஜை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
