ADDED : பிப் 20, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: அந்தியூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்-பட்ட சின்னதம்பிபாளையத்தில், 2021 அக்.12ல் தேனி, பெரியகுளம் பகுதி கருப்பையாவிடம், 4, இரண்டு கிலோ கஞ்சாவை, அந்தியூர் போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, கோவையில் உள்ள அத்தி-யாவசிய பொருட்கள் சட்ட சிறப்பு நீதிமன்-றத்தில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் தீர்ப்-பளிக்கப்பட்டது. கருப்பையாவுக்கு மூன்றாண்டு சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதி-பதி தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் கருப்பையா அடைக்கப்-பட்டார்.
