ADDED : மே 29, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :ஈரோடு வீரப்பன்சத்திரம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 46; தோல் பதனிடும் ஆலை தொழிலாளி. டி.வி.எஸ்., மொபட்டில் ஈரோடு நோக்கி நேற்று முன் தினம் இரவு சென்றார்.
மாமரத்துபாளையத்தை கடந்தபோது நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
