ADDED : செப் 24, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் குமணன் வீதியை சேர்ந்தவர் ஜீவா, 44, தொழிலாளி.
இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். ஜீவாவுக்கு
மது பழக்கம் இருப்பதால், அவரது மனைவி, 7 ஆண்டுக்கு முன் மகள்களுடன்
பிரிந்து சென்று விட்டார்.
கடந்த, 20ல் வீட்டில் அதிக மதுபோதையில்
கீழே விழுந்து மயக்க நிலையில் இருந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு
ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி
நேற்று முன்தினம் ஜீவா உயிரிழந்தார். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
