/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்
/
குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்
ADDED : செப் 04, 2025 02:04 AM
சென்னிமலை, குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலை வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான குரங்குகள் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதி வழியே செல்லும் சாலைக்கு வருவது வழக்கம். குரங்கு
களுக்கு சாலையில் செல்பவர்கள் உணவுகளை வழங்கி வந்ததால், அவைகளின் உணவு பழக்க வழக்கங்கள் மாறி, சாலையில் சுற்றி திரிகின்றன.
இதனால், சென்னிமலை வனத்துறையினர் குரங்குகளுக்கு யாரும் உணவு அளிக்கக்
கூடாது என அறிவுறுத்தி வந்தனர். மேலும், ஆங்காங்கே இது குறித்த எச்சரிக்கை பலகைகளும் வைத்துள்ளனர். ஆனால், இந்த அறிவிப்பையும் மீறி சிலர் உணவளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஊத்துக்குளி ரோட்டில் சென்னிமலை வனக்காப்பாளர் துரைசாமி மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே சென்னிமலை மலை கோவிலுக்கு சென்று
விட்டு, காரில் வந்த திருப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், குரங்குகளுக்கு உணவுகளை வீசி வந்ததை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.