ரயில்வே மின்கம்பியை தொட்டவர் மின்சாரம் பாய்ந்து காயம்
ரயில்வே மின்கம்பியை தொட்டவர் மின்சாரம் பாய்ந்து காயம்
ADDED : ஜூலை 09, 2026 04:51 AM
ஈரோடு:மகுடஞ்சாவடி அருகே ரயில்வே மின்கம்பத்தில் ஏறியவர் மீது மின்சாரம் தாக்கியதில் 50 சதவீதம் தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஈரோடு
மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சேகர், 40. கூலி தொழிலாளி.
திருமணம் ஆனவர். நேற்று அதிகாலை, 1:45 மணியளவில் மகுடஞ்சாவடி அருகே
மின்சார ரயில்கள் சென்று வர அமைக்கப்பட்டு இருந்த மின் கம்பியை
தாங்கிபிடிக்கும் மின் கம்பத்தில் ஏறி, மின் கம்பியை கையால்
பிடித்ததால் மின்சாரம் தாக்கி துாக்கி எறியப்பட்டார்.
தொடர்ந்து, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஈரோடு
ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். சேகர், 50 சதவீத
தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். எதற்காக மின்
கம்பத்தில் ஏறினார். மன நலம் பாதிக்கப்பட்டவரா என விசாரிக்கின்றனர்.
