/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடனால் டிரைவர் தற்கொலை 'தொல்லை' தந்தவருக்கு சிறை
/
கடனால் டிரைவர் தற்கொலை 'தொல்லை' தந்தவருக்கு சிறை
ADDED : ஜூலை 30, 2025 01:25 AM
சத்தியமங்கலம், கடம்பூர்மலை, இருட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார், 36; திருமணம் ஆனவர். சொந்தமாக ஈச்சர் வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். தொழில் அபிவிருத்திக்கு, ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
முறையாக திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்தவர், புளியந்தோப்பில் ஒரு மரத்தில் நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'டி.என்.பாளையம் வெங்கடேசன், அளுக்குளி மனோஜ், அவிநாசி ரமேஷ் ஆகியோரிடம் வாங்கிய பணத்தை கொடுக்க முடியவில்லை. பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கடம்பூர் போலீசார், வெங்கடேசனை, 49, நேற்று கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர். தலை மறைவான மற்ற இருவரை தேடி வருகின்றனர்.