ADDED : பிப் 16, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: எர்ணாகுளம்-காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், எர்ணா-குளத்தை சேர்ந்த ஜெமினா, 60, முன்பதிவு பெட்டியில் காரைக்-காலுக்கு கடந்த 13ல் பயணித்தார்.
ஈரோடு ஸ்டேஷனை ரயில் கடந்தபோது, மொபைல்போன் காணாமல் போனதை அறிந்தார்.இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக திண்டுக்கல் குஜிலியம்பாறையை சேர்ந்த கட்டட தொழிலாளி ரமேஷ், 32, என்பவரை, போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்-தனர்.
