/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதையில் கிணற்றில் விழுந்து விடிய விடிய தவித்தவர் மீட்பு
/
போதையில் கிணற்றில் விழுந்து விடிய விடிய தவித்தவர் மீட்பு
போதையில் கிணற்றில் விழுந்து விடிய விடிய தவித்தவர் மீட்பு
போதையில் கிணற்றில் விழுந்து விடிய விடிய தவித்தவர் மீட்பு
ADDED : நவ 13, 2025 01:17 AM
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே, மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து விடிய விடிய தவித்துக் கொண்டிருந்த தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார்.
வெள்ளித்திருப்பூர் அருகே ஒலகடம் அடுத்த பெரிய கருக்குப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமார், 33, காட்டன் மில் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த முத்துக்குமார் மது குடித்துள்ளார். போதையில் இருந்தவர் இரவு 11:00 மணிக்கு வீட்டின் பின்புறம்
இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, அங்குள்ள ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான, 60 அடி கிணற்றில் தவறி விழுந்தார். இதில், முத்துக்குமாருக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சத்தமிட்டுள்ளார். இரவு நேரம் என்பதால், வீட்டிலிருந்தவர்களுக்கு இவரது அலறல் சத்தம் கேட்கவில்லை. நேற்று காலை, 8:00 மணியளவில் சத்தம் வருவதை கேட்ட சிலர் கிணற்றில் எட்டி பார்த்தனர். அங்கு காப்பாற்றுங்கள் என அலறிக் கொண்டிருந்த முத்துக்குமாரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், வெள்ளித்திருப்பூர் போலீசார், அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கயிறு மூலம் முத்துக்குமாரை மீட்டனர். இவர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

