ADDED : மே 06, 2025 01:57 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:பெங்களூரை சேர்ந்தவர் ஹேமந்த் குமார், 30; தனியார் நிறுவன ஊழியர். பெங்களூரை சேர்ந்த உறவினர் கீதா, 26; இவருடன் ஹோண்டா பைக்கில், பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் சென்றார்.
நள்ளிரவு 1:45 மணியளவில், தாராபுரம்-உடுமலை ரோடு ரவுண்டானா அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஹேமந்த்குமார், தலையில் பலத்த காயமடைந்து பலியானார். இடுப்பில் லேசான காயத்துடன் கீதா தப்பினார்.
