/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தகுதியான பலருக்கு மகளிர் உரிமைத்தொகை இல்லை: மாவட்ட தி.மு.க., நிர்வாகி ஆதாரத்துடன் முறையீடு

ADDED : டிச 16, 2025 08:25 AM

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் வெங்கடாசலம் உட்பட பலர், கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று மனு வழங்கி, போட்டோ ஆதாரத்துடன் கூறியதாவது:
மகளிர் உரிமைத்தொகை திட்டம் உண்மையான மக்களிடம் சென்றடைய, முதல் முறையில் இருந்து தகுதியானவர்கள் மனு வழங்க உதவினோம். நாங்களும் கட்சி மூலம் தகுதியானவர்கள் விபரங்களை வழங்கினோம். அதன் பின் மேல்முறையீட்டிலும், தற்போதும் மனு வழங்கினோம். ஆனால் தகுதியான, 1,000க்கும் மேற்பட்டோர் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குடிசை வீட்டில் வசிப்போர், வீடே இல்லாமல் சாலையோரம் வசிப்போர் விடுபட்டுள்ளனர். 10 ஏக்கர் நிலம் வைத்திருப்போருக்கு கிடைத்துள்ளது. எந்த அடிப்படையில் அதிகாரிகள் பட்டியல் சேர்க்கிறார்கள் என விளக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
மனுவை பெற்ற கலெக்டர், ''தகுதி அடிப்படையிலும், அவர்கள் வழங்கும் ஆவணம், நேரடி விசாரணை மூலமே அதிகாரிகள் தேர்வு செய்கின்றனர். ஆங்காங்கே சிலர் விடுபட்டிருந்தால், கவனத்துக்கு கொண்டு வந்தால் பரிசீலிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் காரணத்தை கூற இயலாது. ஆனாலும் உங்கள் மனு பற்றி விசாரிக்கிறோம்,'' என்றார்.
வெளியே வந்த வெங்கடாச லம், ''அதிகாரிகள் நேரில் விசாரிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு வழங்கினால்தான், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தகுதியானவர்களை நாங்களே பட்டியலிட்டு கொடுத்தும் பலரை விட்டுள்ளனர்,'' என்றார்.