ADDED : பிப் 09, 2026 08:19 AM
அ நிறம் | அளவு
கோபி: கவுந்தப்பாடியில், பொதுமக்கள் மற்றும் மாற்று கட்சியினர், த.வெ.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கானோர், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் த.வெ.க., மாவட்ட செயலாளர்கள் விஜய் பாலாஜி, விஜய் வெங்கடேஷ், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும், த.வெ.க., கட்சி துண்டு, பை, காலண்டர், விஜய் படத்துடன் கூடிய ஸ்டிக்கர் மற்றும் விசில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
