நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில், பெருந்துறையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ஜெயக்குமார் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நான்கு பிரிவாக நடந்த போட்டிகளில், ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளை ஜெ.கே., மூங்கில் காற்று அறக்கட்டளை, ப்ரித்விக் பேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூன்றாவது ஆண்டாக நடத்தின.