ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : இஸ்ரேல் அரசின் இனப்படுகொலைக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், ஈரோடு, சூரம்பட்டி, 4 ரோட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார்.இஸ்ரேல் அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாரிமுத்து, பழனிசாமி, பரமசிவம், கோமதி, முனுசாமி, விஜயராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.