ADDED : மே 07, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
கோபி, : கோபி சட்டசபை தேர்தலில், பயன்படுத்திய எழுது பொருட்கள், கோபி தாலுகா அலுவலகத்தில் பிரிக்கும் பணி நேற்று நடந்தது.
கோபி சட்டசபை தொகுதி
யில், கடந்த ஏப்.,23ல் ஓட்டுப்பதிவு நடந்தது. அதையடுத்து கடந்த, 4ல், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையின் போது பயன்படுத்த, 29 மண்டலம் வாரியாக பேனா, இங்க், பென்சில், ரப்பர், நுால்கண்டு, அரக்கு, தீப்பெட்டி, மெழுகு
வர்த்தி, கவர், டோக்கன், பை என, 60க்கும் மேற்பட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் பணி முடிந்ததால், அந்த எழுது பொருட்கள் அனைத்தும், கோபி தாலுகா அலுவலகத்தில், ரகம் வாரியாக பிரிக்கும் பணி நடந்தது. பத்துக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் இப்
பணியில் ஈடுபட்டனர்.
