ADDED : மே 06, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
டி.என்.பாளையம்:கோவை,
சரவணம்பட்டி, ஜனதா நகரை சேர்ந்தவர் சித்துராஜ், 22; வீட்டருகே
டூவீலர் பட்டறையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
நேற்று
முன்தினம் அதிகாலை, வீட்டில் இருந்து பைக்கில் வெளியேறியுள்ளார்.
நண்பர் உசேனை அழைத்து கொண்டு, கொடிவேரி அருகே ஒட்டர் கரட்டுபாளையம்
பிரிவுக்கு காலையில் வந்துள்ளார். அரக்கன்கோட்டை வாய்க்காலில்
இருவரும் நேற்று மதியம் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு
சென்ற சித்துராஜ், தண்ணீரில் மூழ்கியதில் இறந்தார். பங்களாபுதுார்
போலீசார் சடலத்தை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
