/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊடக மையம், சான்றளிப்பு குழு ஆலோசனை கூட்டம்
/
ஊடக மையம், சான்றளிப்பு குழு ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 18, 2024 03:37 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி தேர்தலை முன்னிட்டு ஊடக மையம், ஊடக சான்றளிப்பு கண்காணிப்பு குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் ஊடக மைய உறுப்பினர்களான பி.ஆர்.ஓ., அலுவலக பணியாளர், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், ஈரோடு மாவட்ட அச்சகத்தினர் பங்கேற்றனர். கலெக்டர் பேசியதாவது: பத்திரிகை, ரேடியோ, 'டி.வி.,' உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாகும் ஒலி, ஒளி வேட்பாளர்கள், கட்சிகள் சார்ந்த விளம்பரங்கள், செய்திகள், புகைப்படங்கள் கண்காணிக்கப்படும். அவற்றை வெளியிடும் முன், இக்குழுவில் தணிக்கை செய்து சான்று பெற்ற பின்னரே ஒலி, ஒளிபரப்ப வேண்டும்.
அச்சக உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகளை அச்சிட வேண்டும்.
சம்மந்தப்பட்ட நபரின் பெயர், விபரங்களை உறுதிமொழி படிவத்துடன் பெற்று, நன்கு தெரிந்த இருவரின் சான்றொப்பம் பெற்று, இரு பிரதிகளாக சமர்ப்பிக்க வேண்டும். அச்சிடும் போஸ்டர், துண்டு பிரசுரம், இதர விளம்பரங்களிலும் அச்சகத்தின் பெயர், விபரங்களை அச்சிட வேண்டும். இவ்வாறு பேசினார்.

