ADDED : செப் 28, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் கடந்த ஆக., ௨ முதல் நடந்து வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 45 முகாம் நடத்த முடிவு செய்து, வட்டாரம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வரும், 3௦ல் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. இதில், 17 சிறப்பு டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்க உள்ளனர். அனைத்து வித பரிசோதனை, மருந்து, மாத்திரை, ஆலோசனை வழங்கப்படும்.