ADDED : ஜன 28, 2026 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், முலாம்பழம் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: அந்தியூர், கொளத்துார் மற்றும் எடப்பாடி பகுதிகளில், நேரடியாக தோட்டத்துக்கு சென்று, விவசாயிகளிடம் இருந்து வாங்கி வந்து விற்றோம். முதல் தரம் பழம் கிலோ, 30 ரூபாய் முதல் 40 ரூபாய்; இரண்டாம் தரம், 20 முதல் 25 ரூபாய், மூன்றாம் தரம் கிலோ, 12 ரூபாய் முதல் 14 ரூபாய் வரையாக எங்களுக்கு கிடைக்கிறது. இதில் இருந்து கொஞ்சம் லாபம் வைத்து நாங்கள் விற்கிறோம். மார்க்கெட்டில் ஒரு கிலோ மூன்றாம் தரம் பழம், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடைக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் மக்கள், வாங்கி செல்கின்றனர். வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கூறினர்.

