sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு-சேலம் இடையே மீண்டும் 'மெமு' ரயில்

/

ஈரோடு-சேலம் இடையே மீண்டும் 'மெமு' ரயில்

ஈரோடு-சேலம் இடையே மீண்டும் 'மெமு' ரயில்

ஈரோடு-சேலம் இடையே மீண்டும் 'மெமு' ரயில்


ADDED : நவ 24, 2025 04:33 AM

Google News

ADDED : நவ 24, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:கோவையில் இருந்து ஏற்கனவே ஈரோடு வழியே சேலத்துக்கு 'மெமு' ரயில் பகலில் இயக்கப்பட்டது. ஆனால் மக்களிடையே வரவேற்பு இல்லாததால், 4 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்டது. அதன் பின் நீண்ட நாட்களாக பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள், கோவை-சேலம் இடையே ஈரோடு வழியே ரயில் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ஈரோடு-சேலம் இடையே புதிதாக, இன்று முதல் 'மெமு' ரயிலை இயக்குகிறது. இதனால் கோரிக்கை விடுத்த அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் இருந்து இன்று காலை, 6:15 மணிக்கு கிளம்பி மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி ஆர்.எஸ். வழியே ஈரோட்டுக்கு, 7:25க்கு வரும். மறு மார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து இரவு, 7:30 மணிக்கு புறப்பட்டு இரவு, 8:45 மணிக்கு சேலம் சென்றடையும். வியாழக்கிழமை மட்டும் இயங்காது. சேலம்-ஈரோடு இடையே கட்டணம் ரூ.20.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: ஈரோட்டில் பணி முடித்து இரவு சேலம் மட்டுமின்றி வழித்தட ஊர்களுக்கு செல்வோருக்கு பயனுள்ளதாக அமையும். கட்டணமும் மிக குறைவு. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us