தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலவச திட்டங்களுக்கு வணிகர் பேரமைப்பு விக்கிரமராஜா எதிர்ப்பு

இலவச திட்டங்களுக்கு வணிகர் பேரமைப்பு விக்கிரமராஜா எதிர்ப்பு

இலவச திட்டங்களுக்கு வணிகர் பேரமைப்பு விக்கிரமராஜா எதிர்ப்பு


ADDED : ஏப் 14, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:

திருவாரூரில் மே, 5ல் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநில மாநாடு நடக்க உள்ளது. தேர்தல் வாகன சோதனை பெயரில் பணம், பொருட்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிப்பதை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்திய பின், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்திய பின் குறைந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் வணிகர்கள், பிரதிநிதிகளிடம், 3, 6 மாதத்துக்கு ஒரு முறை அழைத்து, ஜி.எஸ்.டி., பிற வரி, அதிகாரிகள் தொல்லை, 7, 8 ஆண்டுக்கு முந்தைய கணக்கை கேட்டு அதிகாரிகள் பேரம் பேசுவதை கைவிடுதல் பற்றி பேசி தீர்வு காண வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் வணிகர்கள், ேஹாட்டல்கள் கடுமையாக பாதித்துள்ளது.

ஒவ்வொரு கட்சியும் இலவசங்கள், 1,000, 2,000 என அறிவிப்பதால், வணிகர்கள், மக்கள் மீது வரி, பிற வகைகளில் திரும்ப பெறும் முறை வரும். இலவசமே வேண்டாம். அதற்கு மாற்றாக தரமான சாலை, உள் கட்டமைப்பு, ஏரி, குளம், வாய்க்கால் துார்வாரி, மக்களை வளப்படுத்தும் பணி செய்யலாம். இவ்வாறு கூறினார். அவருடன் மாவட்ட நிர்வாகிகள் சண்முகவேல், செல்வம், லாரன்ஸ் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us