ADDED : பிப் 27, 2024 02:03 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் நடந்தது.
ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் அடிக்கடிகைது செய்யப்படுவதும், அதை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து இன்று பாம்பன் கடற்கரையில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்திலும், துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் நாளை ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதில் கலந்து கொள்வது, என தீர்மானம் நிறைவேற்றினர்.முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
