sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

/

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


ADDED : ஜன 18, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 18, 2026 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர்.

ஈரோடு பெரியார் நகரில் பகுதி செயலர் மனோ-கரன் வீட்டின் அருகே எம்.ஜி.ஆர்., உருவப்படத்-துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மாவட்ட செயலர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

* பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் தலைமையில், எம்.ஜி.ஆர் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் சீனிவாசன், மருத்துவ அணி செயலாளர் யுவ-ராஜா உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.* புன்செய்புளியம்பட்டி, பஸ் ஸ்டாண்ட் வளா-கத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில், 300க்கும் மேற்பட்ட

அ.தி.மு.க.,வினர், ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். பின் அன்னதானம் வழங்கப்பட்-டது. நகர செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

* கோபி அருகே கரட்டூரில் உள்ள த.வெ.க., கட்சி அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்க-ளான கோபி யூனியன் முன்னாள் சேர்மன் மவு-தீஸ்வரன், குறிஞ்சிநாதன், வாசு, கந்தவேல் முருகன், கவிதா செல்வராஜ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்தனர்.

* கோபி, கச்சேரிமேடு அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க., நகர செயலாளர் பிரினியோ கணேஷ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர்.






      Dinamalar
      Follow us