/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
/
பெருந்துறையில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
ADDED : டிச 25, 2024 01:45 AM
பெருந்துறையில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
பெருந்துறை, டிச. 25--
அ.இ.அ.தி.மு.க., கட்சி நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., 37வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெருந்துறையில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் மவுன ஊர்வலம் சென்று, பெருந்துறை, குன்னத்தூர் நால்ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்ராஜ் முன்னிலை வகித்தார். நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிச்சாமி சிவசுப்பிரமணியம், துரைசாமி, கமலக்கண்ணன், பூபாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம், ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா நல்லசாமி, டவுன் பஞ்., கவுன்சிலர் வளர்மதி செல்வராஜ், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

