ADDED : மார் 27, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம், ஆயக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 71; வீரப்பன்சத்திரம் மற்றும் சுற்றுப்பகுதியில் காலை, மாலையில் வீடுதோறும் பால் ஊற்றி வந்தார்.
கடந்த, 24ம் தேதி இரவு மொபட்டில் கனிராவுத்தர் குளம் பகுதியில் சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
