ADDED : ஆக 26, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் காலாவதி அரசு வாகனங்களை ஏலத்தில் எடுத்து வாகன உதிரி பாகங்களை பிரித்து விற்கும் தொழிலில் சிவக்குமார் ஈடுபட்டு வருகிறார். இவரது கடையில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கடையை ஒட்டிய காலியிடத்தில் காய்ந்த புற்கள், முட்கள் கிடந்தன.
இதன் அருகே ஒரு பயன்பாடற்ற எடைக்கு போடும் நிலையில் மினி லாரி நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று நண்பகலில் முட்புதரில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி மினி லாரியிலும் பற்றியது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் செல்லும் முன், அப்பகுதி மக்கள் தண்ணீர் லாரியை வரவழைத்து தீயை கட்டுப்படுத்தினர். விபத்தில் மினி லாரி தீக்கிரையானது. தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.