/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு மீது உடனடி நடவடிக்கை; அமைச்சர் அறிவுரை

ADDED : ஜூலை 19, 2025 01:35 AM
ஈரோடு;ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் கந்தசாமி முன்னிலையில், ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தலைமை வகித்து ஆய்வு செய்தார்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகாமுக்கு வரும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீர் சென்றடைவதையும், கீழ்பவானி, காளிங்கராயன் வாய்க்காலில் துார்வாரும் பணியை விரைவுபடுத்தி தண்ணீர் திறக்க தயாராக வேண்டும், என அமைச்சர் கேட்டு கொண்டார். பிற துறைகளில் நடந்து வரும் பணிகளை விரைவுபடுத்த கேட்டு கொண்டார். எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், எஸ்.பி., சுஜாதா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.